ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் பிரிவு 12 (டி) இன் கீழ் சந்தேகத்திற்கிடமான கல்லறை ஒன்றை தோண்டியெடுக்க அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய கட்டளை உத்தரவு க்காக விண்ணப் பிக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் தொடர்பாக, தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சியில் பார்வையாளராக செயல் படுவதற்கு அல்லது தோண்டியெடுக்க, மற்றும் பிற நடவடிக் கைகளில் ஈடுபட, உத்தரவுக்கு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விண்ணப் பிக்கலாம். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் 13 (1) (k) (iii) மற்றும் (vi) பிரிவுகளின்படி. மனித எச்சங்களை கையாள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்கவும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது.
பிரிவு 12 (டி) இன் கீழ் அதன் அதிகாரத்தை சார் ந்து, மனித எச்சங்கள் குறித்த ஆறு விசாரணைகளில் பார்வையாளராக செயல்பட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் அவை தொடர் புடைய நீதவான் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஒரு பார்வையாள ராக சட்டபூர்வமான பரிந்துரைகளை வழங்கி யுள்ளதுடன் மற்றும் விசாரணைகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது. தளத்திலிருந்து மீட்கப்பட்ட சாட்சிகளின் தொடர்ச்சியான கவனத்தை உறுதிப்படுத்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பரிந்துரைகளை வழங்கி யுள்ளது; எச்சங்களின் பகுப்பாய்விற்கான ஒரு பல்வகை அணுகுமுறை; மற்றும் எச்சங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவ த்தையும் வலியுறுத்தியது.
காணாமல் போன மற்றும் மறைந்து போன ஆட்களின் குடும்பங்களின் உரிமைகள் அத்தகைய நடவடிக்கைகளின் போது பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலையீடுகளையும் செய்துள்ளது.