இடைக்கால நிவாரணம் என்பது காணாமல் போன மற்றும் மறைந்துபோன ஆட்களின் குடும் பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப் படும் வரை உதவி வழங்கும் தற்காலிக நடவடிக்கையாகும். 2018 ஆகஸ்ட் இன் இடைக்கால அறிக்கையில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அளித்த பரிந்துரைகளின் அடிப்ப டையில், அரசு அதன் 2019 பாதீட்டில் ரூ. 500 மில்லியன் இடைக்கால நிவாரணமாக காணாமல் போன அல்லது காணாமலாக்கப்பட்ட ஆட்களின் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 6000 ரூபாய் வழங்க ஒழுங்கு செய்தது. காணப்படாமைக்கான சான்றிதழ் (CoA) அல்லது இறப்பு சான்றிதழ் (CoD) வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த நபரைக் காணவில்லை அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக காணா மல் போயுள்ளதாக இருந்தால் இடைக்கால நிவாரணத்திற்கு உரிமை உண்டு. அப்போதைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவல கம் 153 குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரண கொடுப்ப னவுகள் சுமார் ரூ .7 மில்லியன் மதிப்பில், 2019 நவம்பர் 11 வரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவி த்தது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்ந்து இடைக்கால நிவாரணக் கொடுப் பனவுத் தொகையைத் தொடர அரசாங்கத்துடன் வாதிடுகிறது.