காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட ஆட்களின் பட்டியல்

2020 ஆம் ஆண்டில், காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட ஆட்கள் (பட்டியல்) தொடர்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பெற்றுக்கொண்ட முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் பட்டியலை உருவாக்குவதில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கவனம் செலுத்தியது. 2018 பெப்பிரவரியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் பிரிவு 10 (1) (e) இன் படி காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட ஆட்கள் தொடர்பான தரவை ஒன்றிணைத்தல் மற்றும் மையப்படுத்துதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல் முறையின் ஒரு பகுதியாகும். ஒரு ஒருங்கி ணைந்த பட்டியலை உருவாக்குவது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு விசாரணைகள் மற்றும் புலன் விசாரணைகளை நடத்தவும், உள்ளக செயல்முறைகளை உருவாக்கவும் காணாமல் போன மற்றும் மறைந்து போன ஆட்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குதற்கும் உதவுகிறது.

பட்டியலைத் தொகுக்கும்போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பயன்படுத்திய பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள்
i) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் முறைப்பாடுகள்;
ii) முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் 2017 ஆம் ஆண்டில் மாவட்ட செயலகங்களிலிருந்து பெறப்பட்டு மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகள்; மற்றும்
iii) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் ஆயுதப்படைகளால் வழங்கப்பட்ட நடவடிக்கையின் போது காணாமல் போன ஆளணியினரின் பட்டியல்கள்.

பட்டியலில் பின்வரும் தகவல்கள் உள்ளன:
i) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஒதுக்கப்பட்ட தொடர் இலக்கம்;
ii) காணாமல் போன அல்லது மறைந்து போன நபரின் பெயர் ஆங்கிலத்திலும் சிங்களம் அல்லது தமிழிலும்;
iii) நபர் காணாமல் போன அல்லது மறைந்து போன திகதி;
மற்றும்
iv) காணாமல் போன அல்லது மறைந்து போன நபர் கடைசியாக வசித்த மாவட்டம்.

நடவடிக்கையின் போது காணாமல் போன ஆளணியினரின், பட்டியலில் பின்வரும் தகவல்கள் உள்ளன:
i) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஒதுக்கப்பட்ட தொடர் இலக்கம்;
ii) ஆங்கிலத்தில் காணாமல் போனவரின் பெயர்;
iii) நபர் காணாமல் போன திகதி;
iv) முப் படையினரால் பணியாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட சேவை எண்;
v) காணாமல் போனவரின் தரவரிசை;
vi) நபர் காணாமல் போன இடம் மற்றும்
vii) இராணுவப் பணியாளர்கள் விஷயத் தில், காணாமல் போனவரின் படைப் பிரிவு.

காணாமல் போன அல்லது காணாமலாக்கப்பட்ட அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை மீளாய்வு செய்வதற்கு 2020 பெப்பிரவரி யில், காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட ஆட்களின் குடும்பங்களை தொடர்பு கொள்ள அழைப்பதன் மூலம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பட்டியலை சரிபார்க்கும் செயல்முறையைத் தொடங்கியது. அதேசமயம், பதிவுகளின் இரட்டிப்பைத் தவிர்ப்பதற்காக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உள்ளக சரிபார்ப்பு செயல்பாட்டில் ஈடுபட்டது. குடும்பங்களுக்கு அக் குடும்பத்தின் விடயங்கள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டளைக்குள் வராவிட்டால் அல்லது வழங்கப்பட்ட தகவல்கள் தெளிவற்றதாக அல்லது போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மேலதிக தகவல்களை கோரியது.

மோதல் தொடர்பாக காணாமல் போன அல்லது மறைந்து போன ஆட்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு இடையூறுகள் அல்லது கட்டாயமாக காணாமல் போதல், அல்லது கட்டாயமாக காணாமல் போனது, மற்றும் நடவடிக்கையின் போது காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படைகள் அல்லது காவல்துறையினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் பிரிவு 27 ன் படி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டளைக்கு உட்பட்டுள் ளனர். பட்டியலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக ஆணைக்கு உட்பட்ட விடயங்கள் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணைக்கு உட்பட்டதா என்பதை தீர்மானிக்க மேலும் தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் உள்ளன. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணைக்கு வெளியே சுனாமி ஆழிப்பேரலை காரணமாக காணாமல் போனவர்களைக் குறிப்பிடலாம்.

இலங்கையில் காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட ஆட்களின் விரிவான உத்தியோகபூர்வ பதிவை நிறுவுவதற்கு பட்டியல் தயாரிப்பு ஒரு முக்கியமான படியாகும். நவம்பர் 2020 ல், காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகமானது காணாமல் போனோர் தொடர்பான இறுதிப் பட்டியலை தயாரிக்கும் செயன்முறையில் ஈடுபட்டிருந்தது. குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டியலின் வன்பிரதிகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் மற்றும் அதன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள அதன் பிராந்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பட்டியல் காணாமல் போன அலுவலகத்தின் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.